Mon. Nov 25th, 2024

அடுத்தகட்டப் பேச்சுவார்த்தை ஜன.19ல் நடைபெறுகிறது…

மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள 3 புதிய வேளாண் சட்டங்களுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. அந்தச் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் 50 நாள்களுக்கு மேல் போராடி வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு தீர்வு காண, 4 பேர் கொண்ட குழுவையும் உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது.

இதனிடையே, மத்திய அரசுக்கும், விவசாயிகளுக்கும் இடையே 8 கட்டங்களாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில், எந்த சுமூக உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில், 9 வது கட்ட பேச்சுவார்த்தை இன்று டெல்லியில் நடைபெற்றது. மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டர். இந்தக் கூட்டத்திலும், இருதரப்பினரிடையே சுமூக முடிவு எட்டப்படவில்லை. இதனையடுத்து, அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை வரும் 19 ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.