Mon. Nov 25th, 2024

நாளைய விற்பனையையும் கடந்த இரண்டு நாட்கள் விற்பனையான 417,18 கோடி ரூபாயுடன் சேர்த்தால், கடந்தாண்டு பொங்கல் திருவிழாவையொட்டி 3 நாட்கள் விற்பனையான 610 கோடி ரூபாயை விட முறியடிக்கும் என்று எதிர்பார்ப்பதாக டாஸ்மாக் அலுவலர்கள் தகவல் தெரிவிக்கின்றனர்.

போகி மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி கடந்த 2 நாள்களில் ( ஜன.13 மற்றும் 14) மட்டும் டாஸ்மாக் மதுவிற்பனை மூலம் 417.18 கோடி ரூபாய் வசூலாகியுள்ளது. இன்று திருவள்ளூவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நாளை காணும் பொங்கல் கொண்டாடப்படவுள்ள நிலையில், மதுபான விற்பனை மேலும் விறுவிறுப்படையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

காணும் பொங்கல் விற்பனையுடன் கடந்த இரண்டு நாள் விற்பனையைப் போல அதிகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, டாஸ்மாக் விற்பனையாளர்கள் மற்றும் அதிகாரிகளிடம் அதிகமாக இருக்கிறது.