Mon. Nov 25th, 2024

பொங்கல் திருவிழா நாளன்று சென்னை கலைவானர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய, அதன் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, தி.மு.க.வை அழிக்க, சசிகலாவை கூட அ.தி.மு.க.வில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார். அப்போது அவர் கூறிய உவமை, அ.தி.மு.க. மற்றும் அ.ம.மு.க.வினரிடமும் மட்டுமல்ல பொதுத்தளத்திலும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அவரின் பேச்சுக்கு அமைச்சர் ஜெயக்குமார் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவரின் உவமைக்கு எதிராக பேட்டியளித்த அவர், வீடு தீப்பற்றி எரியவும் இல்லை. அதனால், அணைக்க வேண்டிய அவசியமும் இல்லை என்று கூறிய அமைச்சர், குருமூர்த்திக்கு தான் ஒரு சாணக்கியர், கிங் மேக்கர் என்றும் நினைப்பு என கிண்டலடித்துள்ளார் அமைச்சர் ஜெயக்குமார்.

இதேபோல, பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் சுப்பிரமணிய சுவாமியும், ஆடிட்டர் குருமூர்த்தியை கடுமையாக விமர்சனம் செய்தள்ளார். ஜெயலலிதா மறைந்த நாளில் இருந்தே சசிகலாவை தான் ஆதரித்து வருவதாகவும், இப்போதுதான் குருமூர்த்தி, சசிகலாவை ஆதரிக்கத் தொடங்கியிருக்கிறார் என்றும் கூறியுள்ளார். மேலும், இதுவரை ரஜினியைதான் அவர் ஆதரித்து வந்தார் என்றும் இப்போது வேறுவழியில்லாமல் சசிகலாவைப் பற்றி பேச தொடங்கியிருக்கிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார் சுப்பிரமணிய சுவாமி..