Tue. May 7th, 2024

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாதுகாப்பு தொடர்பான மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று பிற்பகல் டெல்லியில் கூடியது. இந்தக் கூட்டத்தில் இந்திய ராணுவத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் 48 ஆயிரம் கோடி ருபாய் மதிப்பில் 83 தேஜஸ் போர் விமானங்கள் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இதுதொடர்பாக, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தனது டிவிட்டர் பதவில் குறிப்பிட்டுள்ளார்.மேலும், நவீனப்படுத்தப்பட்ட 83 மார்க் – 1ஏ விமானங்கள் இந்திய விமானப் படைக்கு மிகப்பெரிய வலிமையாக அமையும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், தேஜஸ் போர் விமானங்களை தயாரித்து வருகிறது. நான்காம் தலைமுறை அதிநவீன தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்பட்ட 83 தேஜஸ் மார்க் 1ஏ இலகு ரக போர் விமானங்கள், இந்திய விமானப்படையில் 2022 ஆம் ஆண்டிற்குள் முழுமையாக சேர்க்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்படுகிறது.