Fri. Nov 22nd, 2024

மீன் குஞ்ககளையே வெட்கப்படும் அளவிற்கு தண்ணீருக்குள் வித்தை காட்டும் இவர், கிறிஸ்டினா மகுஷென்கோ. ரஷியாவில் புகழ் பெற்ற நீச்சல் வீராங்கனை… .

மியாமியில் வசித்து வரும் கிறிஸ்டினா உள்நாடு மற்றும் சர்வதேச அளவில் நீச்சல் போட்டிகளில் எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

அவற்றையெல்லாம் தூக்கி சாப்பிடும் அளவிற்கு தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் வித்தைகளை செய்து அசத்தியுள்ளார். மூச்சுப் பிடித்து சில நிமிடங்கள் தண்ணீருக்குள் நிற்பதே சிரமம் என்ற நிலையில், நீச்சல் வீராங்கனை கிறிஸ்டினாவின் ஜிம்னாஸ்டிக் வித்தைகள், பார்ப்போரை வியப்பில் ஆழ்த்துகிறது. தனது துணிச்சலான ஜிம்னாஸ்டிக் வித்தைகளை வீடியோவாக பதிவு செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார், கிறிஸ்டினா

சலனமற்ற நீருக்கடியில் இசைக்கேற்ப வளைந்து நெளிந்து ஜிம்னாஸ்டிக் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி ஆயிரக்கணக்கானோர் ரசித்து பார்த்து வருகின்றனர். அதே அளவுக்கு பகிரப்பட்டும் வருகிறது.

நடப்பு ஆண்டின் துவக்கத்தில் மகுஷென்கோ நீருக்கடியில் மூன்வாக் நிகழ்த்தும் வீடியோ வைரலாகியது. அதனை மிஞ்சும் வகையில் தண்ணீருக்குள் ஜிம்னாஸ்டிக் செய்யும் கலர்ஃபுல் வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது