Wed. May 8th, 2024

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான சின்னம்மா சசிகலாவைப் பற்றி யார் தவறாக பேசினாலும் அதை பொறுத்துக் கொண்டிருக்க மாட்டோம் என அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் அமைச்சர் கோகுல இந்தியா தெரிவித்துள்ளார்.

தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்மையில் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும், சசிகலா நடராஜனையும் மிகக் தரக்குறைவாக விமர்சனம செய்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு..க சார்பில் கோயம்புத்தூரில் நேற்று முன்தினம் கண்டனப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து, இன்று காலை அண்ணாநகரில் அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா உள்பட ஏராளமானோர், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கோகுல இந்திரா, சசிகலா ஒரு கட்சியின் தலைவராக இருந்தவர் என்றும் ஜெயலலிதாவுக்கு துணையாக இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர் என்றும் தெரிவித்தார். அவரை தவறாக பேசுவை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் அவர் எங்கிருந்தாலும் தாங்கள் மரியாதையுடன் போற்றுவோம் என்றும் அவர் கூறினார்.