Wed. May 8th, 2024

மலைக்கிராம மக்களின் வாழ்க்கை என்பது நகர வாழ்க்கையில் இருந்து முழுமையாக மாறியிருக்கும். வருமானத்தை அடிப்படையாக கொண்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்ளாமல், ஒவ்வொரு நிமிடமும் இயற்கையோடு கலந்து, இன்புற்று வாழ்வதற்கு கற்றுக் கொண்டவர்கள். நகரத்தில் இருந்து மலையேறி யார் சென்றாலும், இரவு நேரங்களில் விருந்தினர்களை, அவர்களுக்கு உரிய கும்மிப்பாடலை பாடி நடனம் ஆடி மகிழ்வித்து மகிழ்வார்கள்.

மகிழ்ச்சியும், துயர நிகழ்வுகளும் மலைவாழ் மக்களிடம் இசையோடு கலந்தவை. அந்த வகையில் சேலம் மாவட்டம் கெங்கவள்ளிக்குட்பட்ட பச்சமலை ஊராட்சியில் அமைந்துள்ள மலைவாழ் மக்களின் விருந்தாளியாக மாறிப் போனார், கெங்கவல்லி திமுக வேட்பாளர் ரேகா பிரியதர்சினி. தேர்தல் பரப்புரையை மறந்து, அவர்களோடு இணைந்து அவரும் நடனமாடி, தேர்தல் களைப்பில் இருந்து தன்னை ஆசுவாசிப்படுத்திக் கொண்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையின் நிறைவு நிமிடங்கள் ஆட்டமும் பாட்டுமாக கலகலக்க, கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் கலவர சூழலை உருவாக்கி பொதுமக்களை அச்சமூட்டிவிட்டது.

சிதம்பரத்தில் ஆளுங்கட்சியான அதிமுக.வுக்கு மட்டும் இரு சக்கர வாகனத்தில் பிரச்சாரம் செய்வதற்கு அனுமதி அளித்துவிட்டு அமமுக.வுக்கு போலீசார் மறுப்பு தெரிவித்துவிட்டதாக தகவல் பரவியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நிறைவு பிரசார நேரத்தின் போது தங்களையும் இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி வழங்காத போலீசாரை கண்டித்து சிதம்பரம் போலீஸ் நிலையம் முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகிகள் தொண்டர்கள் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

விஜய் டிவி, திரைத்துறை, வெளிநாட்டு சுற்றுப்பயணம் என கலக்கிக் கொண்டிருக்கும் கிராமிய கலைஞர்கள் ராஜலெட்சுமி, செந்தில் கணேஷ் ஆகியோரின் கலகலப்பு பாடல் இல்லாத தேர்தலா…..

இவர்கள் எல்லாம் இப்படிக்கா ஒரு ரூட் எடுத்து போறாங்கன்னா, இன்னொரு கூட்டம் அப்படிக்கா ரூட் எடுத்து போகுது..அதையும் ஏன் விட்டு வைப்பானே….