Wed. May 22nd, 2024

போகிப் பண்டிகை :குடியரசு துணைத் தலைவர் உற்சாகம்..

குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, தனது குடும்பத்தினருடன் கோவாவில் உள்ள ஆளுநர் மாளிகையில்  தங்கியுள்ளார். இன்று அதிகாலை, வெண்பட்டு வேட்டி, சட்டை, அங்கவஸ்திரம் உள்ளிட்ட புத்தாடைகளை அணிந்த அவர் மற்றும் குடும்பத்தினர், ஆளுநர் மாளிகை வளாகத்தில் பழைப் பொருள்களை எரித்து போகியை உற்சாகமாக கொண்டாடினார்கள்.

வேள்வி பூஜை செய்வதுபோன்று, செங்கற்களை அடுக்கி குண்டம் அமைக்கப்பட்டு, அதில் பழைய பொருட்கள் மற்றும் கட்டைகளை அடுக்கி தீயிட்டு எரித்து குடியரசுத் துணைத் தலைவர் போகி கொண்டாடினர்.

தமிழக அரசுக்கு விஜயகாந்த் வேண்டுகோள்;

பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 2019-ம் ஆண்டு ஜாக்டோ ஜியோ சங்க கூட்டமைப்பு சார்ப்பில் போராட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் 5,068 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்வதற்கான குறிப்பாணைகளை தமிழக அரசு பிறப்பித்திருக்கிறது. இதனால், கடந்த 2 ஆண்டுகளில் பணி ஓய்வுபெற்ற 42-க்கும் மேற்பட்டவர்கள் தங்களுக்குரிய ஓய்வூதிய பயன்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். எனவே, அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இறைச்சி விற்பனைக்குத் தடை :

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு நாளை மறுநாள் (ஜன.15) வெள்ளிக்கிழமையன்று சென்னை மாநகரப் பகுதிகளில் ஆடு, மாடு, இதர இறைச்சி கடைகளில் இறைச்சி விற்பனை செய்வதற்கும், பல்பொருள் அங்காடிகள் மற்றும் வணிக வளாகங்களில் பதப்படுத்திய இறைச்சி விற்பனை செய்யவும் சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது.

இதேபோல், தமிழகம் முழுவதும் ஜன.15 ஆம் தேதி இறைச்சி விற்பனைக்கு அனுதியில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

பா.ஜ.க யார் முதுகிலும் சவாரி செய்யாது ; நடிகை கௌதமி…

விருதுநகர் மேற்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோவில் முன்பு “நம்ம ஊரு பொங்கல்” நடைபெற்றது. இதில், கலந்துகொண்ட பா.ஜனதா மாநில செயற்குழு உறுப்பினரும், ராஜபாளையம் தொகுதி தேர்தல் பொறுப்பாளருமான நடிகை கவுதமி, பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதன் விபரம்:

பாரதிய ஜனதா கட்சிதமிழகத்தில் நல்ல வளர்ச்சி கண்டுள்ளது. கூட்டணி அமைப்பதே, அனைவரும் ஒற்றுமையாக இருந்து இலக்கை அடைய வேண்டும் என்பதற்காகதான். யார் முதுகிலும் சவாரி செய்ய வேண்டிய அவசியம் பா.ஜ.க.வுக்கு கிடையாது. அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க. வை ஆதரிக்க வேண்டும் என்று நடிகை கௌதமி கூறினார்.