திமுக பொதுக்கூட்டம், தேர்தல் பிரசாரம் என்றால் 10 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பம் குடும்பமாக திமுக.வினர் கலந்துகொள்வார்கள். ஆனால், கடந்த பல ஆண்டுகளாக, குடும்பமாக கலந்துகொள்வோரின் எண்ணிக்கை குறைந்து, திமுக நிகழ்வு என்றாலே செல்வாக்குமிக்க, பணக்கார களை தெரிய ஆரம்பித்தது. அதன் உச்சகட்ட வளர்ச்சி, இன்றைக்கு திரைப்பட ப்ரோமோவை மிஞ்சும் வகையில், தொழில்நுட்பத்தின் ஆதிக்க கைகளில் திமுக.சிக்கிக் கொண்டுவிட்டது. இதே நிலை நீடித்தால் திமுக.விடம் இருந்து ஏழை எளிய விளிம்பு நிலை மக்கள் விலகி வெகு தொலைவுக்கு சென்றுவிடுவார்கள். கட்சி பதவியும், மக்கள் பிரதிநிதி பதவிகளும் இன்றைக்கு பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே என்று எழுதப்படாத சட்டம் ஒன்று திமுக.தலைமையால் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தலைவர்களை பார்க்க வேண்டும் என்றால் கூட, வாட்ஸ் மூலம், சமூக ஊடகங்கள் மூலம்தான் பார்க்க முடியும் என்ற நிலைக்கு வறிய மக்களை திமுக தலைமை கொண்டு வந்து நிறுத்திவிடும் போல என்று ஆதங்கத்தோடு பேசுகிறார் அண்ணா காலத்தில் கட்சிப் பணியாற்றிய திமுக விசுவாசி ஒருவர்.