Mon. Nov 25th, 2024

புதுச்சேரியில் அமைச்சர்களை, சபாநாயகரை, கட்சியினரை பாஜக வினர் மிரட்டினார்கள். இன்றைக்கு உங்களிடம் வாக்கு கேட்டு வரும் பாஜக தலைமையிலான மூன்று கட்சிகளுக்கு என்ன நோக்கம், மக்களை நம்பி வைத்து ஏமாற்றுவதுதான். அந்த மூன்றுக் கட்சிகளுக்குள்ளேயாவது ஒற்றுமை இருக்கிறதா என்றால் இல்லை. மத்தியில் பாஜக கடந்த 2014 ஆம் ஆண்டில் ஆட்சி அமைத்த நாளில் இருந்து பாஜக பிரதமர் மோடிக்கு என்ன வேலை என்றால், பாஜக ஆட்சிப் புரியாத மாநில அரசுகளை எல்லாம் கலைப்பதுதான்.

2016ல் அருணாச்சலப் பிரதேசம், 2017ல் கோவா, மணிப்பூரில், 2018ல் மேகாலயா, ஜம்மு காஷ்மீர், 2019ல் கர்நாடகம், சிக்கிம், 2020ல் மத்தியப் பிரதேசம், 2021ல் புதுச்சேரியில் காங்கிரஸ் ஆட்சியை கடைசியாக கலைத்தார்கள். இப்படி மாநில அரசுகளை கலைத்துக் கொண்டிருக்கிற மத்திய அரசை டெல்லியில் தொடர்ந்து ஆட்சிப் புரியாமல் கலைக்கிற சக்தி நமக்கு வரவேண்டும்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியை கலைப்பதுதான் அவர்களின் நோக்கமாகவே இருக்கிறது. மிருகப்பெரும்பான்மையால், பாசிச தன்மையால், பாஜக அல்லாத காங்கிரஸை கலைப்பதுதான். கடந்த 2016 தேர்தலில் புதுச்சேரியில் பாஜக வாங்கிய மொத்த வாக்குகள் 19 ஆயிரம்தான். அப்படி வாக்குகளை பெற்ற பாஜக.தான் இன்றைக்கு அதிமுக, என்.ஆர்.காங்கிரஸை மிரட்டி, 9 தொகுதிகளை பாஜக பெற்றுள்ளது. பாஜக.வின் மிரட்டலுக்கு பயந்து, ரங்கசாமியும், அதிமுக தலைவர்களும் தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள். இதேபோலதான், தமிழகத்திலும் முதல்வர், துணை முதல்வர் பாஜக தலைவர்களுக்கு தலையாட்டிக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் உள்ள அதிமுக அரசு துரோக அரசு என்று சொல்வேன். அதுபோல இங்கு இருக்கிற பாஜக என்ஆர்காங்கிரஸ், அதிமுக கூட்டணி வேஸ்ட் என்று சொல்வேன். திமுக, காங்கிரஸ் தலைமையில் உள்ள கூட்டணிதான் பெஸ்ட் என்று சொல்வேன். இந்த தேர்தலில் தப்பித்தவறி பாஜக வெற்றிப் பெற்றால், என்ஆர் காங்கிரஸ் ரங்கசாமி முதல்வராக பதவியேற்க முடியுமா?அவருக்கும் தெரியும்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.