Sun. Apr 20th, 2025

உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப்பதிவு….

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்தும், சசிகலா குறித்தும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவதூறாக பேசியதாக சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் ராஜலட்சுமி. காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் .விசாரணை நடத்திய மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர், உதயநிதி ஸ்டாலின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

விவசாயிகள் போராட்டத்தை தொடர முடிவு…..

வேளாண் சட்டங்களுக்கு எதிரான போராட்டம் தொடரும் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன. உச்சநீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசித்த பின், 32 விவசாய சங்கங்கள் கூட்டதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

வேளாண் சட்டம் தொடர்பாக உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழு மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை என்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவானவர்களே உச்சநீதிமன்றம் அமைத்த குழுவில் இடம்
பெற்றுள்ளனர் என்றும் விவசாய சங்கங்கள் தெரிவித்துள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு, போராட்டத்தை முன் கூட்டியே முடிக்கும் திட்டம் இல்லை என்றும் விவசாயிகள் சங்கங்கள் அறிவித்துள்ளன.

மின்சாரம் தாக்கி 5 பேர் பலி..

தஞ்சை மாவட்டம் வரகூர் அருகே சாலையோரம் இருந்த மின்கம்பி மீது தனியார் பேருந்து உரசியதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், பேருந்தில் பயணம் செய்த 10க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.