மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடம், சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர் நினைவிட வளாகத்திற்குள் அமைந்துள்ளது. அங்கு 50 80 கோடி ரூபாய் செலவில் பீனிக்ஸ் பறவை வடிவத்தில் பிரம்மாண்டமான நினைவிடம் அமைப்பதற்கான கட்டுமான ப் பணி நடைபெற்று வருகிறது.. அந்த பணி தற்போது நிறைவுக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் இன்று(ஜன.12) நண்பகல் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அங்கு ச் சென்று கட்டுமானப்பணிகளை ஆய்வு செய்தார்..அவரிடம் கட்டுமானப் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் விளக்கி கூறினர். பின்னர் ஜெயலலிதா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து முதல்வர் மரியாதை செலுத்தினார்..அவருடன் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் பலர் சென்றிருந்தனர்..