முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பண்டிக்கைக்குப் பிறகு, வரும் 18 ஆம்தேதி டெல்லி செல்கிறார். இரண்டு நாள்கள் டெல்லியில் தங்கியிருக்கும் அவர், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களைச் சந்தித்து பேசுகிறார். இந்த சந்திப்பின் போது, சசிகலா விடுதலை, தமிழக முதல்வர் வேட்பாளர், அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து முக்கிய ஆலோசனைகள் நடைபெறும் என்று டெல்லி தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், டெல்லி மேலிட அழைப்பை ஏற்றுதான் முதல்வர் பயணம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும் தகவல் கசிவதால், அ.தி.மு.க.மேலிடத்திற்கு முக்கியமான சில கட்டளைகளும் பிறப்பிக்கப்படலாம் என்றும் டெல்லி அரசியல் பிரமுகர் ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார்.