Tue. Apr 30th, 2024

தமிழ்நாடு போயர் சமூக கூட்டமைப்பு வலியுறுத்தல்…

தமிழகத்தில் சிறுபான்மை சமுதாயமாக உள்ள போயர் மக்கள், மாநிலம் முழுவதும் 50 லட்சத்திற்கு மேற்பட்டோர் பரவி வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள இந்த சமுதாயத்தின் மக்கள், அரசியல் அங்கீகாரம் பெறுவதற்காக, ஒவ்வொரு தேர்தலின்போதும் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தக் கட்சியும் போயர் சமுதாயத்திற்கு உரிய முக்கியத்துவம் தரவில்லை. இந்நிலையில், போயர் சமுதாயத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகள் ஒன்றாக கூடி, தமிழ்நாடு போயர் சமுக கூட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தலைவர் ஜெகநாதன் தலைமையில் கூட்டமைப்பு நிர்வாகிகள் சென்னையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், கூட்டமைப்பு நிர்வாகிகள் குமரன்,பூபதி, தேகமலை, ரவி, தர்மராஜ், பாபு, மாரியப்பன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய போயர் கூட்டமைப்பு தலைவர் ஜெகநாதன், போயர் சங்கத் தலைவர் கஜேந்திரன் ஆகியோர், வரும் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இணைந்து தேர்தலைச் சந்திப்பது, தங்கள் சமுதாயத்திற்கு 5 தொகுதிகள் ஒதுக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்றுவதாக தெரிவித்தனர்.