Tue. May 21st, 2024

மதுரையை பூர்வீக கொண்டவர் பொறியாளர் செந்தூர்வேலன், குடும்பத்துடன் திருச்சியில் வசித்து வந்தார்.

ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் உள்ள நிறுவனத்தில் பொது மேலாளராக பணிபுரிந்து வந்தார். திடீர் மாரடைப்பால் ஒரு வாரத்திற்கு முன்பு அங்கு இயற்கை எய்தினார்.

“அவரது உடலை இந்தியா கொண்டு வருவதற்கான வாய்ப்புகள் இல்லை; எனவே, இங்கேயே இறுதிச் சடங்குகள் செய்து விடுகின்றோம்” என, நைஜீரியத் தலைநகர் லாகோசில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.

ஆனால், அவரது குடும்பத்தினர், உடலைப் பார்க்க வேண்டும்; இந்தியா கொண்டு வர ஏற்பாடு செய்ய வேண்டும் என, வைகோவிடம் முறையிட்டனர்.

இது தொடர்பாக, அயல் உறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் நைஜீரியாவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும், ஜனவரி 7 ஆம் நாள், வைகோ மின்அஞ்சல் கடிதங்கள் எழுதினார். அயல்உறவுத்துறை அமைச்சக அதிகாரிகளுடன் அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார்.

இதையடுத்து, நேற்று மாலை செந்தூர் வேலன் உடல் சென்னை விமான நிலையம் வந்தடைந்தது. திருச்சியில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.