Tue. May 21st, 2024

புதிய வேளாண் சட்டங்கள் மற்றும் டெல்லியில் 47 நாட்களாக விவசாயிகள் போராடி வருவது தொடர்பாகவும் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் இன்று நடைபெற்றது.

அப்போது, புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடும் குளிரிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், சிறிது காலத்திற்கு புதிய சட்டங்களை நிறுத்தி வைக்க முடியுமா ?என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. விவசாயிகள் சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். பெண்கள், முதியோர்களும் கூட போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளனர் என்றால், அங்கு என்ன நடக்கிறது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் போராட தடை இல்லை என்று கூறியதுடன் விவசாயிகள் தொடர்ந்து போராடுவதற்கும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது..

போராட்டக்களத்தில் யாரும் ரத்தம் சிந்தக் கூடாது.போராட்டத்தில் ஏதாவது தவறு நேர்ந்தால் அனைவரும் பொறுப்பாக வேண்டும்.விவசாயிகள் விவகாரத்தில் மத்திய அரசு கையாளும் முறை ஏமாற்றம் அளிப்பதாகவும்உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே அமர்வு கருத்து தெரிவித்துள்ளது..