Fri. May 17th, 2024
                                     மத்திய அரசின் மூன்று விவசாய சட்டங்களின் நன்மைகள முன்னிலைப்படுத்தி கர்னல் மாவட்டத்தில் உள்ள கைம்லா கிராமத்தில் கிசான் மகாபஞ்சாயத்து எனும் பெயரில்  மக்களிடையே உரையாற்ற திட்டமிட்டிருந்தார் அரியானா முதல்வர் மனோகர்லால் கட்டார்.                       "                                 பாரதிய கிசான் யூனியனின் (சாருனி) பதாகையின் கீழ், சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி வரும் விவசாயிகள், முதல்வரின் கிசான் மகாபஞ்சாயத்தை எதிர்ப்பதாக அறிவித்து கறுப்புக்கொடி ஏந்தி முழக்கமிட்டவாறே கைம்லா கிராமத்தை நோக்கி  அணிவகுத்தனர்.கிராமத்தின் நான்குபுற எல்லையில் போலீசார் அமைத்திருந்த தடுப்புகளை அகற்றிவிட்டு ஆவேசத்துடன் விவசாயிகள்  முன்னேறினர்.நிலைமை மோசமானதையடுத்து தண்ணீரை பீச்சி அடித்தும், கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசியும் கூட்டத்தை கலைக்க முயன்றனர். ஆயினும் விவசாயிகள் முன்னேறி இறுதியாக முதல்வருக்காக அமைக்கப்பட்டிருந்த மேடையை சேதப்படுத்தி, அந்த இடத்தில் இருந்த நாற்காலிகள், மேசைகள் மற்றும் பூஞ்செடி தொட்டிகளை  உடைத்தனர்.             உச்சபட்சமாக  முதலமைச்சரின் வருகைக்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக ஹெலிபேடையும் சின்னாபின்னமாக்கினர்!                விவசாயிகளின் ஒன்றுபட்ட எதிர்ப்பின் காரணமாக முதல்வரின் பொதுக்கூட்ட நிகழ்வானது ரத்து செய்யப்பட்டது.