Sun. Apr 20th, 2025

இலங்கை கடற்படையின் அத்துமீறலைக் கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்.
மீன் பிடிக்க கடலுக்குச் செல்வதில்லை என்று அறிவிப்பு.

கோயம்புத்தூரில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பரப்புரை.
தமிழகம் மாற்றத்திற்கு தயாராகிவிட்டதாக மக்கள் நீதி மய்யத் தலைவர் பெருமிதம்.

பொள்ளாச்சியில் ஏற்கெனவே அறிவித்தபடி கனிமொழி ஆர்ப்பாட்டம்.
போலீஸ் தடையை மீறி கலந்துகொண்ட அவர், தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று குற்றம்சாட்டினார்.

புதுச்சேரியில் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து 3 வது நாளாக முதல்வர் நாராயணசாமி தர்ணா.
மாநில வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பதாக காங்கிரஸ் குற்றச்சாட்டு.

உலகளவில் டிவிட்டரில் முதல் இடத்தைப் பிடித்தார் பிரதமர் நரேந்திரமோடி..
அமெரிக்க அதிபர் டிரம்பரின் டிவிட்டர் முடக்கப்பட்டதால், முதல் இடத்திற்கு முன்னேறினார் பிரதமர்.

இந்திய அணி வீரர்களை இனவெறியுடன் திட்டிய ஆஸ்திரேலியனருக்கு கண்டனம்..
இந்திய அணியிடம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி மன்னிப்பு கோரியது.