Sun. Nov 24th, 2024

ம. சோ. விக்டர் எனும் பெரும் தமிழியல் ஆய்வறிஞர் 35 ஆண்டு காலம் ஆய்வுகள் மேற்கொண்டு 126 புத்தகங்களை வெளியிடும் பணியில் ஈடுபட்டுள்ளார். அதில் 25 புத்தகங்கள் முதல்கட்டமாக வெளியிட நிதி இல்லை. அதற்கு 10 லட்சம் ரூபாய் அவருக்குத் தேவையாக இருந்த நேரத்தில், அது தொடர்பாக, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேண்டுகோள் விடுக்க, அக்கட்சியினர், முன்பதிவாக மட்டுமே 13 லட்சம் ரூபாய் விக்டர் ஐயாவின் புத்தக வெளியீட்டுக்குக் கிடைத்தது.

அந்த நிதியுதவி மூலம் தயாரிக்கப்பட்ட ம.சோ. விக்டரின் புத்தகத் தொகுப்புகளின் வெளியீடு சென்னையில் 9ம் தேதி நடை பெற்றது. அதில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்துகொண்டு புத்தகங்களை வெளியிட்டனர். இந்த நிகழ்வில் தமிழ் தேசிய உணர்வாளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.