Fri. May 9th, 2025

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வலியுறுத்தி சென்னை வள்ளூவர் கோட்டத்தில் அவரது ரசிகர்கள் பலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ரசிகர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த போராட்டத்துக்கு ஏற்கனவே சென்னை போலீசார் 36 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி உள்ளனர்.

இந்த போராட்டத்தின் போது வா தலைவா வா.. இப்போது இல்லைன்னா எப்போதும் இல்லை.. உங்கள் ஆட்சி வேண்டும் என்பது உள்ளிட்ட முழக்கங்களை ரஜினி ரசிகர்கள் எழுப்பினர்.

ரஜினிகாந்தை அரசியலுக்கு வர வலியுறுத்தும் பதாகைகளையும் ரசிகர்கள் அங்கு வைத்திருந்தனர்.