01.01.2021
தமிழகம் :
தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைத்தவுடன் தமிழகம் முழுவதும் 6 லட்சம் முன்கள பணியாளர்களுக்கு கொரோனோ தடுப்பூசி போட நடவடிக்கை – தமிழகத்தில் ஜன.2ல் 11 இடங்களில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை – சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் தகவல்.
ஜனவரி 4 முதல் 2ம் கட்ட கலந்தாய்வு – தமிழக சுகாதாரத்துறை அறிவிப்பு. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டின் கீழ் இன்னும் 12 இடங்கள் உள்ளன. 4ம் தேதி அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், 5ம் தேதி பொதுப்பிரிவு மாணவர்களுக்கும் கலந்தாய்வு.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான திட்ட மதிப்பீடு ரூ.1,264 கோடியில் இருந்து ரூ.2 ஆயிரம் கோடியாக அதிகரிப்பு. 85% நிதித்தொகையை ஜப்பான் ஜைக்கா நிறுவனம் கடன் உதவியாக வழங்குகிறது.
ஆங்கில புத்தாண்டையொட்டி தமிழகத்தில் டிசம்பர் 31ல் ரூ.159 கோடிக்கு மது விற்பனை. முதல் இடத்தில் சென்னை – ரூ.48.75 கோடி. 2 ஆம் இடம் கோவைக்கு- 28.40 கோடி.
எடப்பாடி தான் என் தொகுதி. அவர்களின் கோரிக்கைகளில், பெரும்பாலானவற்றை நிறைவேற்றி தந்திருக்கிறேன். என்னை அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் – முதல்வர் இ.பி.எஸ்.
மத்திய அரசு கொண்டுவந்த 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்- முதல்வருக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம் செயல்படாமல் முடங்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது- மதிமுக பொதுச்செயலாளர் வைகோ.
ஜனவரி 6ல் சென்னையில் மு.க. ஸ்டாலின் தலைமையில் மாநாடு – ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி தலைவர் ஓவைசி பங்கேற்பு.
அமைதியாக பிறந்தது 2021. சாலைகளில் கொண்டாட்டங்கள் இல்லை.
திருந்தி வாழ்ந்த கஞ்சா வியாபாரி மீது பொய் வழக்குப்போடுவதாக மிரட்டி லஞ்சம் வாங்கிய காவல்துறை ஆய்வாளர் சரோஜினி, ஏட்டு ராமசாமி கைது.
இந்தியா :
மத்திய அரசின் நிதி உதவியுடன் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் தமிழகம் உள்ளிட்ட ஆறு மாநிலங்களில் வீடு கட்டும் திட்டத்தை காணொளி வாயிலாக பிரதமர் மோடி துவக்கி வைத்தார்.
ஜிஎஸ்டி வருவாய், இதுவரை இல்லாத அளவாக 2020 டிசம்பர் மாதத்தில் ரூ.1,15,174 கோடி கிடைத்துள்ளது- மத்திய நிதியமைச்சகம் தகவல்.
2021 புத்தாண்டை வரவேற்று பிரதமர் மோடி கவிதை; உற்சாகப்படுத்தி ஊக்கமூட்டும் வகையில் எழுதிய ஆங்கில கவிதை டிவிட்டரில் வெளியீடு.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இதர டெஸ்ட் போட்டிகளில் நடராஜன் சேர்ப்பு.