Sun. Nov 24th, 2024

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் ஏற்கனவே தடுப்பூசி போடுவதற்கு 6 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இதில் யார்-யார்? முன் வருகிறார்களோ அவர்களுக்கு மட்டும் தான் தடுப்பூசி போடப்படும். யாருக்கும் கட்டாயப்படுத்தி தடுப்பூசி போடப்படமாட்டாது.

இந்த பணிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் தான் போலியோ சொட்டு மருந்து முகாமை தேதி குறிப்பிடாமல் மத்திய அரசு ஒத்திவைத்துள்ளது. பிரதமர் மோடி நாளை மாநில முதல் மந்திரிகளுடன் ஆலோசனை நடத்தியதற்கு பிறகு கொரோனா தடுப்பூசிக்கான மேலும் பல வழிமுறைகள் வெளியிடப்படும்.

தமிழகத்தில் 16-ந்தேதி கொரோனா தடுப்பூசி போடும் பணியை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார். அன்றைய தினம் அவர் மதுரையில் இருப்பதால் அங்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.