பொள்ளாச்சி பாலியல் வழக்கில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி தி.மு.க. சார்பில் இன்று அங்கு அக்கட்சியின் மகளிர் அணி தலைவர் கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிக்கப்பட்டிருந்தது.
ஆர்ப்பாட்டத்தில்கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்ற கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லை என்று கூறப்பட்டது. இதனைக் கண்டித்து கனிமொழி உள்ளிட்ட தி.மு.க.வினர் தரையில் அமர்ந்து காவல்துறைக்கும், அ.தி.மு.க. அரசுக்கு எதிராகவும் கண்டன முழக்கங்களை எழுப்பி வருகின்றனர்…