Sun. Nov 24th, 2024

அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை (ஜன.9) 11 மணியளவில் பூந்தமல்லி அருகே நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், முதலமைச்சர் வேட்பாளராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு அங்கீகாரம், கூட்டணி குறித்து ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் முடிவு எடுக்க அங்கீகாரம் வழங்குவது உள்பட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து மாலையில், ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சி தலைமைக் கழகம் அமைத்தில், மண்டல பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. 3 மூன்று மணிநேரத்திற்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், தேர்தல் கூட்டணி, பிரச்சார வியூகம், தேர்தல் அறிக்கை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.