Sun. Nov 24th, 2024

பாட்டாளி மக்கள் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று (ஜன.9) காணொலி வாயிலாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், இளைஞரணித் தலைவர் அன்புமணி, தலைவர் ஜி.கே.மணி உள்பட நிர்வாக் குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர். இந்தக் கூட்டத்தில், 20 சதவிகித இடஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க மருத்துவர் ராமதாஸ் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும், அதனை ஏற்று வரும் சட்டமன்றக் கூட்டத்தொடருக்கு முன்பாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தீர்மானத்தின் சுருக்கம்

வன்னியர்களுக்கு 20 சதவிகித தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தி வந்த டாக்டர் ராமதாஸ், தற்போது உள்ஓதுக்கீட்டை கூட ஏற்றுக் கொள்ளத் தயார் என்று அறிவித்துள்ளார். இந்தநேரத்தில், அவரின் உணர்வை ஏற்று வன்னியர்களின் உள்ஒதுக்கீடு கோரிக்கையை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் விரைந்து நிறைவேற்றவேண்டும். அதுவும், பொங்கல் பண்டிகை முடித்து சட்டமன்றக் கூட்டம் தொடங்குவதற்கு முன்பாக அறிவிக்க வேண்டும். அதை தவிர்த்து காலதாமதம் செய்தால், பா.ம.க.வின் செயற்குழுவைக் உடனடியாக கூட்டி அரசியல் ரீதியான முடிவு எடுக்கப்படும் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.