Sun. Apr 20th, 2025

அ.தி.மு.க. பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றம்….

அ.தி.மு.க. கூட்டணி அமைப்பது தொடர்பாக, உரிய முடிவெடுக்க ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., ஆகியோருக்கு அதிகாரம் அளிப்பது உள்பட 16 தீர்மானங்கள் அ.தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டதற்கு வரவேற்பு, அனைவருக்கும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்என்று அறிவித்த முதல்வர் இ.பி.எஸ்.ஸுக்கு நன்றி தெரிவித்தல், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நினைவு மண்டபம் எழுப்ப உத்தரவிட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி உள்பட 16 தீர்மானங்கள் இடம் பெற்றுள்ளன.