Sun. Nov 24th, 2024


வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாட்டில், காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது:
வெளிநாடு வாழ் இந்தியர்கள், பல வெளிநாடுகளில் தங்களின் அடையாளத்தை, திறமை மிகுந்த செயலாற்றலை கடந்த பல ஆண்டுகளாக பலப்படுத்தியுள்ளனர். அவர்களின் சேவைகள், மனிதநேய பங்களிப்பு பற்றி கேள்விப்படும் நிகழ்வுகள் மிகுந்த பெருமைக்குரியவையாக இருக்கிறது. இன்றைக்கு தகவல் தொழில் நுட்பம் ஆளுமை மிகுந்ததாக உள்ளதால், இளம்தலைமுறையினர், அதிநவீன தொழில்நுட்பத்தை திறம்பட கையாண்டு, இந்தியாவின் வளர்ச்சிக்கு உதவுவதுடன், தாய் நாட்டிற்கு புகழையும் தேடி தர வேண்டும் என வலியுறுத்தினார்.
தொடக்க காலத்தில் மாஸ்க்குகள், வென்டிலேட்டர்கள், பிபிஇ கிட்கள் ஆகியவற்றை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால், குறுகிய காலத்திற்குள்ளாகவே இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. மேலும், கொரோனா தடுப்பூசி ஆகியவற்றில், மனித நேயத்தை காக்க இந்தியா தயாராக உள்ளது. கொரோனா ஒழிப்பில் இந்தியா முன்னிலையில் உள்ளது. மிகுந்த முன்னெச்சரிக்கையுடன் மேற்கொள்ளப்பட்ட தடுப்பு நடவடிக்கைகளால் இறப்பு விகிதம் குறைவாக உள்ளது. பயங்கரவாதம் எனும் சவாலை இந்தியா எதிர்கொண்ட நேரத்தில் உலக நாடுகளும் தைரியத்துடன் அதனை எதிர்கொண்டன. நலத்திட்டங்களுக்கான கோடிக்கணக்கான பணம், பயனாளர்களின் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறினார்.