Sun. Nov 24th, 2024

பா.ஜ.க.வுடனான கூட்டணியை உறுதி செய்து தீர்மானம் நிறைவேற்றப்படுமா ?
நாடாளுமன்றத் தேர்தலில் இருந்த கூட்டணியே மீண்டும் தொடருமா?
இப்படி பல கேள்விகளுக்கு இன்றைய தினம் தெளிவான விடை கிடைத்துவிடும்….

அ.தி.மு.க பொதுக்குழு சென்னை பூந்தமல்லி அருகே உள்ள பிரபல திருமண மண்டபத்தில் இன்று காலை 11 மணியளவில் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூடுகிறது. இதில், அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை முதல்வருமான எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.
இந்தக் கூட்டத்திற்கு பங்கேற்பதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து வந்துள்ள அ.தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர்கள், கொரோனோ பாதிப்பு இல்லை என்று சான்றிதழுடன் பொதுக்குழுவில் கலந்துகொண்டுள்ளனர்.
இந்தக் கூட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, மீண்டும் ஆட்சியைக் கைப்பற்ற தேவையான வியூகம், தேர்தல் பணி உள்ளிட்டவை குறித்து விரிவாக விவாதிக்கப்படவுள்ளதாக தெரிவித்தனர்.
வானரகத்தில் உள்ள பிரபல திருமண மண்டபத்தில் இந்தக் கூட்டம் நடைபெறுவதையொட்டி, அந்த மண்டபம் வளாகம் உள்பட, அந்த மண்டபத்திற்கு செல்லும் சாலைகளில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மறைந்த முதல்வர் ஜெயலலிதா காலத்தில் எப்படிபட்ட வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்குமோ, அதற்கு சற்றும் குறையாமல் வரவேற்பு ஏற்பாடுகள் தூள் கிளப்பப்பட்டுள்ளன.