முதல் அமைச்சர் இ.பி.எஸ்.ஸின் இமேஜை பொதுமக்களிடம் அதிகமாக்குவதற்காகவும், தி.மு.க.விற்கு எதிராக வாக்காளர்களின் மனநிலையை மாற்றவும் உருவாக்கப்பட்ட அ.தி.மு.க. ஐ.டி.விங்கிற்கு 150 கோடி ரூபாய் பணம் வாரி வழங்கப்பட்டிருக்கிறதாம். அத்தனையும் வேஸ்ட்டாகி போகிறது என்று புலம்புகிறார்கள் அ.தி.மு.க.வின் விசுவாசமிக்க தொண்டர்கள். தி.மு.க.வையும், மு.க.ஸ்டாலினையும் கிண்டல் செய்தும் கேலி செய்தும் உருவாக்கும் வீடியோ கிளிப்பிங்ஸ், இமேஜ் கார்டு உள்ளிட்டவற்றை வாட்ஸ் அப், பேஸ் புக், டிவிட்டர் போன்ற சமூக ஊடகங்களில் பரப்புவதுதான் அ.தி.மு.க. ஐ.டி. விங்கின் தலையாய பணி. இதற்காக சென்னை உள்ளிட்ட மாவட்ட தலைநககரங்களில் ஆயிரக்கணக்கானோரும், தொகுதிவாரியாக பல நூறு பேரும் பணியில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். இதில், பெரும்பாலும் அ.தி.மு.க.நிர்வாகிகளின் வாரிசுகளுக்குதான் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஊர்தோறும் அ.தி.மு.க. ஐ.டி. விங்க் என்று புதிய அணி ஒன்று உருவாக்கப்பட்டு, அதன் கீழ் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். முதல்வர் இ.பி.எஸ். ஸின் பெருமைகளை, சாதனைகளை அதிகளவு மக்களிடம் கொண்டு செல்ல, கவர்ச்சிகரமான முழக்கங்களை உருவாக்குவதுதான் சென்னையில் உள்ள ஐ.டி.விங்கின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் தலையாய பணி. இதுபோன்ற வாசகங்களை உருவாக்க கொஞ்சம் மூளையை கசக்கிதான் வேலை செய்ய வேண்டும். மேலும், கூடுதல் பணியாக, 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க.வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகள், மக்களிடம் செல்வாக்குள்ள அ.தி.மு.க. நிர்வாகிகள் யார், யாரையெல்லாம் நிறுத்தினால் தொகுதிகளில் வெற்றி எளிதாகும், அ.தி.மு.க.வுக்கு சாதகம், பாதகமான தொகுதிகள் எவை எவையென தொகுதி வாரியாக மக்களிடம் கருத்து கேட்டு, அ.தி.மு.க. தலைமையிடம் கருத்துக் கணிப்பு ரிப்போர்ட்டை வழங்குவதையும் ஐ.டி.விங்க் தான் செய்ய வேண்டும்.
இப்படிபட்ட பணிகளை செய்வதற்கும், ஐ.டி. விங்க்கில் உள்ள நிர்வாகிகளை ஒருங்கிணைக்கவும் சுனில் என்பவரை அ.தி.மு.க. தலைமை (இ.பி.எஸ். டீம்) நியமித்துள்ளது. இவரது தலைமையிலான ஐ.டி. விங்கிற்குதான் 150 கோடி ரூபாய் வாரி வழங்கப்பட்டிருக்கிறது. இவர் யாரென்றால், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தி.மு.க.வுக்காக வேலை பார்த்தவர். அப்போது அங்கு விசுவாசத்தை காட்டி, அ.தி.மு.க.வில் சிலிப்பர் செல்களை உருவாக்கி, அ.தி.மு.க. என்ன மாதிரியான தேர்தல் வியூகங்களை வகுக்கிறது என்று ஸ்மெல் செய்து, ஸ்டாலினிடம் ஒப்படைத்தவர்தான் இந்த சுனில். இப்போது அ.தி.மு.க.வுக்கு தாவிய சுனில், தி.மு.க.வில் சிலிப்பர் செல்களை உருவாக்கி, அ.தி.மு.க.வுக்குதானே நியாயப்படி நல்லது செய்ய வேண்டும். அதுதானே பெற்றுக் கொண்ட கூலிக்கு உண்மையாக உழைப்பது. ஆனால், அதற்கு மாறாக சுனில், இப்போதும் அக்மார்க் தி.மு.க. சிந்தனையோடுதான் செயல்படுகிறார் என்று குற்றம்சாட்டுகிறார்கள் அவருக்கு நெருக்கமான நண்பர்கள். அ.தி.மு.க. தலைமை என்னமாதிரியான தேர்தல் வியூகங்களை வகுக்கிறது என்பதையெல்லாம் தி.மு.க. மீதான பழைய பாசத்தில், ஸ்டாலின் அன் கோவிற்கு பாஸ் செய்து வருகிறாராம் சுனில்.
உண்ட வீட்டிற்கு துரோகம் செய்யும் நபருக்கு பணத்தை வாரி இரைப்பதற்குப் பதிலாக, 150 கோடி ரூபாயை லட்சங்களாக பிரித்து கணக்கிட்டால், 15 ஆயிரம் லட்சம் ரூபாய் வருகிறது. இதை ஒவ்வொரு லட்சமாக பிரித்து, அ.தி.மு.க. போட்டியிடவுள்ள 100 அல்லது அதற்கு மேற்பட்ட தொகுதிகளிலோ உள்ள அ.தி.மு.க.வின் ஆயிரக்கணக்கான ஊராட்சி மன்ற செயலாளர்களுக்கோ மாதந்தோறும் தேர்தல் வரை சம்பளமாக கூட வழங்கிவிட முடியும். அவர்களும், இ.பி.எஸ். ஓ.பி.எஸ். மீதுள்ள கோபத்தை மறந்துவிட்டு அ.தி.மு.க. வெற்றிக்காக உயிரைக் கொடுத்து தேர்தல் வேலைகளை இப்போது இருந்தே செய்வார்கள். அதுமட்டுமல்லாமல், அ.தி.மு.க.வுக்காக வாழ்நாளையே அர்ப்பணித்து ஊர் ஊராக கிராமம், கிராமமாக சென்று தொண்டை கிழிய கத்தும் அ.தி.மு.க. பேச்சாளர்களுக்கு வழங்கினால், மறைந்த அம்மா ஜெயலலிதா ஆசிர்வாதம் கூட இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்களுக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் அ.தி.மு.க. ஐ.டி. விங்க் நிர்வாகிகள் உயிரைக் கொடுத்து தி.மு.க.வையும், ஸ்டாலினையும் டேமேஜ் செய்து வரும் நிலையில், தலைநகரான சென்னையில் அமர்ந்து கொண்டு சுனில் மற்றும் அவரது தலைமையிலான டீம், லட்டு மாதிரி, அ.தி.மு.க. தேர்தல் வியூகங்களையும், இ.பி.எஸ். மற்றும் ஓ.பி.எஸ். இடையே உள்ள கருத்து வேறுபாடுகளையும் உதயநிதிக்கும், சபரிசனுக்கும் தூக்கி கொடுத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
இதைவிட கொடுமை என்னவென்றால், அ.தி.மு.க. ஐ.டி. விங்கையே தன்னுடைய சிலிப்பர் செல்லாக மாற்றிக் கொண்டு விட்ட சுனில், தற்போது தன்னுடைய தி.மு.க. விசுவாசத்தை, அ.தி.மு.க. தொலைக்காட்சியான நியூஸ் ஜெ.விலும் தன்னுடைய ஆதிக்கத்தை நிலை நிறுத்த முயற்சிக்கிறாராம். உடம்பெல்லாம் தி.மு.க. ரத்தம் ஓடும் நபரை, அதுவும் காசு என்றால் காலை கூட நக்கும் ஒரு நபரை, நியூஸ் ஜெ. டிவின் செய்தி ஆசிரியர் பணியில் அமர்த்த, ஆள் பலம், பண பலம் படைத்த ராதாகிருஷ்ணனையே எதிர்ப்பதுடன், அவரையே நியூஸ் ஜெ. டி.வி.யின் நிர்வாகப் பொறுப்பில் இருந்து விரட்ட, சதித்திட்டத்தை தீட்டியுள்ளாராம்.
ராதாகிருஷ்ணன் என்பவர், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரர். அவரின் தலைமையில்தான் நியூஸ் ஜெ.டி.வி. தற்போது செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அந்த டி.வி. தொடங்கப்பட்டபோது, மூம்மூர்த்திகளாக அமைச்சர்கள் சி.வி.சண்முகம், வேலுமணி, தங்கமணி ஆகியோரின் பங்களிப்பும் இருந்தது. ஆனால், நிர்வாகத்தில் ஏற்பட்ட கருத்து மோதல்களால், பின்னவர்கள் இரண்டு பேரும் சைலன்ட் மோடுக்கு சென்றுவிட்டார்கள்.
இந்த சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டுள்ள ஐ.டி. விங்க் சுனில், நியூஸ் ஜெ. டி.வி.யை கைப்பற்ற, மதிவாணன் (முன்னாள் ஜெயா டி.வி. செய்தி ஆசிரியர்) என்பவரை நியூஸ் ஜெ. டிவியின் தலைமைப் பொறுப்பில் நியமிக்க, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரின் உறவினர்கள் மூலம் ராதாகிருஷ்ணனுக்கு நாள்தோறும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகிறார்களாம். இதில் உச்சகட்டவேடிக்கை என்னவென்றால், நியூஸ் ஜெ. டி.வி.யின் செயல்பாட்டில் எந்தவிதமான அக்கறையும் காட்டாமல் இருந்த முதல்வர் இ.பி.எஸ். ஸின் மகன் மிதுன், தற்போது சுனிலுக்கு ஆதரவாக களத்தில் இறங்கியிருக்கிறாராம். மிதுனுக்கு தேவையான அல்லது விருப்பத்திற்கு மேலான சேவைகளை செய்து கொண்டிருக்கும் தியாகராஜன் என்பவரை சுனில் வளைத்து, அமைச்சர் சி.வி. சண்முகத்தின் சகோதரரான சி.வி. ராதாகிருஷ்ணனை, நியூஸ் ஜெ. டி.வி. நிர்வாகத்தில் இருந்து விரட்டுவதுதான் முதல் வேலை என சுனில், மிதுன், தியாகராஜன் ஆகிய மூவர் கூட்டணி தீவிரமாக வேலைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்களாம்..
இவர்கள் கை ஓங்கினால், ஒட்டுமொத்த நியூஸ் ஜெ. டி.வி., அக்மார்க் தி.மு.க. காரர்களின் கைகளில் சென்றுவிடும் என்று புலம்புகிறார்கள் அம்மா ஜெயலலிதாவின் உண்மையான பக்தர்கள்.
சங்கை நாம் ஊதிவிட்டோம்.. என்ன நடக்கிறது என்று பார்ப்போம்…