Sun. Nov 24th, 2024

உடனடியாக அகற்ற வேண்டும்..

சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தமிழகம் முழுவதும் பொது விநியோக கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் இந்த பொங்கல் தொகுப்பை, ஊழியர்கள் வழங்குவதற்கு பதிலாக, ஆளும்கட்சியைச் சேர்ந்த அ.தி.மு.க.வினர் வழங்கி வருவதாக தி.மு.க.வினர் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றனர். மேலும், பொது விநியோக கடைகள் முன்பு அ.தி.மு.க.வுக்கு ஆதரவாக பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதாகவும் தி.மு.க.சார்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனைத்தொடர்ந்து, அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனர்களை அகற்ற உத்தரவிடக் கோரி, தி.மு.க.சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, பொது விநியோக கடைகள் முன்பு வைத்துள்ள அ.தி.மு.க. விளம்பர பேனர்களை உடனடியாக அகற்ற வேண்டும், பொங்கல் பரிசு வழங்கும்போது, அ.தி.மு.க.வுக்கு ஆதரவான துண்டுச் சீட்டுகளை விநியோகம் செய்யக் கூடாது, பொங்கல் பரிசு பைகளில் முதல்வர், முன்னாள் முதல்வர் ஆகியோரின் புகைப்படங்கள் இடம்பெறலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.