நாடு முழுவதும் 736 மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
நாடு முழுவதும் இரண்டாம் கட்டமாக இன்று மொத்தம் 736 மாவட்டங்களில் தடுப்பூசி போடும் ஒத்திகை தொடங்கியுள்ளது.
இதேபோல், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று தடுப்பூசி ஒத்திகை 190 இடங்களில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனையொட்டி சென்னை வந்துள்ள மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்சவர்தன், கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்குகளையும், கொரனா தடுப்பூசி செலுத்தும் ஒத்திகையையும் இன்று ஆய்வு செய்கிறார்.
பின்னர் அவர் நண்பகலில் முதல்-அமைச்சர் பழனிசாமியை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில், தமிழகத்துக்கு தேவையான கொரோனா தடுப்பூசி எண்ணிக்கை, கொரோனா தடுப்பூசி செலுத்த தேவையான நடவடிக்கைகள் மற்றும் தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அம்சங்கள் இடம் பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.