வரும் 27ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்புள்ளதாக அவரது வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அவருக்கு எதிரான வருமான வரி வழக்கு விசாரணை, சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது அவரது தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வரும் 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாக வாய்ப்பு உள்ளதாக கூறி, பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
மேலும் சில முக்கியச் செய்திகள்
உத்தேச பதில்கள் :கடந்த ஞாயிறு அன்று நடந்த குரூப் 1 தேர்வுக்கான உத்தேச பதில்கள் டி.என்.பி.எஸ்.சி இணையதளத்தில் வெளியீடு – விடைகள் பற்றி ஆட்சேபம் இருந்தால் ஜனவரி 14க்குள் தெரிவிக்கலாம் என்றும் அறிவிப்பு.பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறப்பது குறித்த பெற்றோர்களின் கருத்துகளை அரசிடம் தாக்கல் செய்தது பள்ளிக்கல்வித்துறை.
பெற்றோர் ஆதரவு :பொங்கலுக்கு பிறகு பள்ளிகளை திறக்க 95% பெற்றோர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.18ல் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தகவல்.தமிழகத்தில் பள்ளிகளை திறக்க 70% பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல்.10,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நெருங்குவதால் நேரில் பயிற்றுவிக்க வேண்டியுள்ளதாக பெற்றோர்கள் கருத்து.
தமிழில் தேர்வு : மொழிகளில் அஞ்சல கணக்கர் தேர்வை நடத்த வேண்டும்;தமிழகத்தில் தமிழில் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் தர வேண்டும் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன்.
கைது :லஞ்சம் பெற்ற திண்டுக்கல் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலக உதவி இயக்குனர் முத்துகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.புதிதாக மனைப்பிரிக்க அனுமதி வழங்க ரூ.1 லட்சம் லஞ்சம் வாங்கும் போது லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்
பீட்டா மிரட்டல்: ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான அனுமதியை தமிழக அரசு திரும்ப பெற பீட்டா அமைப்பு வலியுறுத்தியுள்ளது. போட்டிகளை நிறுத்தாவிட்டால் ஜல்லிக்கட்டால் மட்டுமன்றி கொரோனா காரணமாகவும் மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளதாக பீட்டா அமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.
அனுமதி :தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் மருத்துவமனையில் அனுமதிநுரையீரலில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி என முதற்கட்ட தகவல்