கோவையில் அரசு விழாவை நிறைவு செய்த பிரதமர் மோடி, கொடிசியா வளாகத்தில் நடைபெற்ற பா.ஜ.க. பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். தனது உரையின் துவக்கத்தில், மக்களை நோக்கி ‘வணக்கம் தமிழ்நாடு’ ‘வணக்கம் கோவை’ என்றார். தொடர்ந்து, ‘வெற்றி வேல் வீரவேல்’ என்று முழக்கமிட்டு தனது உரையைத் தொடங்கினார்.
தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு, பாரதிய ஜனதா கட்சி செயல்படுகிறது.
முந்தைய திமுக ஆட்சியின்போது கடுமையான மின்வெட்டு நிலவியதால், தொழில்கள் முடங்கின. ஒட்டுமொத்த தமிழகத்துக்கான கட்சி என்ற பெயரை திமுக இழந்துவிட்டது.
திமுக – காங்கிரஸ் ஆகிய கட்சிகளுக்கு சுயலாபம் ஒன்றுதான் அரசியல் இலக்கு.
பல ஆண்டுகளாக ஆட்சி செய்த திமுக தேவேந்திர குல வேளாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை.
தமிழ் மொழி உலகிலேயே மிகவும் பழமையான மொழி. தமிழர்களின் பண்டிகைகள் உலகம் முழுவதும் புகழ்பெற்றவை. நாடு முழுவதும் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்வியை பிராந்திய மொழியிலேயே கற்றிட அனுமதிப்பதென முடிவெடுத்துள்ளோம். இதனால் எண்ணற்ற இளைஞர்கள் பயன்பெறுவார்கள்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பிரசார மேடையில், தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன் உள்பட அனைத்து நிர்வாகிகளும் அனுமதிக்கப்பட்டனர்.
பின்னர் ஒருநாள் தமிழக சுற்றுப்பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி, கோவையில் இருந்து தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.