Sun. Apr 20th, 2025

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை, உலகமே தலைவராக ஏற்றுக் கொண்டு விட்டதாக பாரதிய ஜனதாவில் ஒரு தரப்பினரும், வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்து மத பற்றாளர்களும் உரக்க கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மோடி எதைச் செய்தாலும் அறிவுப்பூர்வமாக ஆராய்ந்து பார்க்காமல், கண்மூடித்தனமாக பாராட்டு, பெருமை பேசிக் கொள்வதையே வழக்கமாக கொண்டிருப்பவர்கள், இந்திய திருநாட்டிற்கு வரமா.. சாபமா என்பதை தான் சிந்தித்து பார்க்க வேண்டியிருக்கிறது.