இதுதொடர்பாக, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பிரபாகர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கை விபரம் இதோ:-
திருக்கோவில் பணியாளர்களுக்கு பொங்கல் கருணைக் கொடை ரூ.1,000 வழங்க அனுமதி அளிக்கப்படுகிறது. அனைத்து நிலை பணியாளர்கள் உட்பட முதுநிலை மற்றும் முதுநிலை அல்லாத அனைத்து திருக்கோவில் பணியாளர்களுக்கும் வழங்கிட அனுமதி அளிக்கப்படுகிறது.
2019- 2020-ம் ஆண்டு 240 நாட்களும் அதற்கு மேலும் பணிபுரிந்த பணியாளர்களுக்கு கருணைக் கொடையாக ரூ.1,000-மும், 6 மாதத்திற்கு மேல் 240 நாட்களுக்குள் பணியாற்றிய பணியாளர்களுக்கு அவர்கள் பணிபுரிந்த நாட்களுக்கு மட்டும் விகிதாச்சார அடிப்படையில் இத்தொகை வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.