Mon. Apr 29th, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியை ஒற்றை ஆளாக சுமந்து கொண்டிருக்கிறேன் என்று கடந்த இரண்டாண்டுகளாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருந்த உதயச்சந்திரன் ஐஏஎஸ், மூன்றாம் ஆண்டில் அடியெடுத்துள்ள திமுக ஆட்சியில் ஓரம் கட்டப்பட்டுள்ளார்.

ரிங் மாஸ்டர் போல திமுக ஆட்சியை மீண்டும் இயக்கலாம் என்ற திட்டத்தோடு, தனக்கு மிகவும் நெருங்கிய நண்பரான முருகானந்தம் ஐஏஎஸ்ஸை, தான் வகித்த பதவியான செல்வாக்குமிக்க முதல் அமைச்சரின் செயலாளர் நெம்பர் 1 ல் அமர்த்தி, தனது இரும்பு பிடிக்குள்ளேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சியை வைத்துக் கொள்ள உதயச்சந்திரன் ஐஏஎஸ் போட்டிருக்கும் சதி திட்டத்தை உடைத்து எறிய துணிந்துவிட்டார் உள்துறை செயாளராக பதவியேற்று இருக்கும் அமுதா ஐஏஎஸ்…

அதிகாரத்தை கைப்பற்றும் நோக்கத்திலும், தலைமை ஏற்கும் திட்டத்தோடும் ஆடு புலி ஆட்டத்தை கையில் எடுத்திருக்கும் இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு இடையேயான போட்டியில் வெல்லப் போவது அமுதா ஐஏஎஸ்ஸா, அல்லது உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸா…

அடுத்து வரும் சில மாதங்களில் வெற்றியாளர் யார் என்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். ஆனால், தற்காலிக நிம்மதி என்னவென்றால், முதல் அமைச்சர் தலைமையில் நடைபெறும் முக்கிய ஆய்வுக் கூட்டங்கள், ஆலோசனைக் கூட்டங்களில் இன்றைய தேதியில் உதயச்சந்திரன் ஐஏஎஸ்ஸுக்கு இடம் இல்லை என்பதுதான் என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்கள் தலைமைச் செயலக உயரதிகாரிகள்…