ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்திற்கு தொழில் துறையாலும், மனிதநேயமிக்க பொதுச் சேவையாலும், துடிப்புமிக்க அரசியலாலும் மட்டுமே பெருமை இல்லை. ஆன்மிகச் சேவைகளாலும் கொங்கு மண்டல புகழ் உயர உயர பறக்கப் போகிறது என்பதற்கு அத்தாட்சியாக நிற்கிறது 39 அடி உயர கால பைரவர் சிலை.
பிரம்மாண்டாக எழுந்து தெய்வீகத்தை வீசிக் கொண்டிருக்கும் 39 அடி உயர கால பைரவர் சிலை, ஆன்மிகத்தின் அற்புதம். பிரபஞ்சத்தில் பிரமிக்க வைக்கும் இறை சக்தியின் அருளால் மட்டுமே அதிசயங்கள் நடைபெறும். ஆயிரம் ஆண்டுகளை கடந்தும் அருளாசி வழங்கும் பிரம்மாண்டமான கால பைரவர் கடவுளை கண் முன் நிறுத்தியிருக்கிறார் ஸ்வர்ண பைரவ பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி.
ஈரோடு மாவட்டம் காங்கேயம் நெடுஞ்சாலையில் உள்ள அவல்பூந்துறை இராட்டை சுற்றிபாளையத்தில் தெய்வீகத்தை பரப்பிக் கொண்டிருக்கும் ஸ்வர்ண பைரவ பீடத்தில், பூகோளத்தில் எங்குமே இல்லாத அற்புதமாக 39 டி உயர கால பைரவர் சிலையை நிறுவியுள்ளார் ஸ்வர்ண பைரவ பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி.
கோடி கோடியாக பணத்தை குவித்து வைத்திருக்கும் செல்வந்தர்களால் சாதிக்க முடியாத இறைப்பணியை, தனியொரு இறைத் தொண்டராக நின்று ஸ்வர்ண பைரவ பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி சாதித்துக் காட்டியிருக்கிறார். உலகத்தையே ரட்சித்துக் கொண்டிக்கும் முக்காலத்திற்கும் உரிய கடவுளான ஈசனின் ஆசி இல்லாமல், அருள் இல்லாமல் அவல்பூந்துறையை தெய்வீக பூமியாக மாற்றி அமைத்திருக்க முடியாது.
சிவப்பெருமானின் திருவிளையாடல்கள் பக்தர்கள் உள்ளங்களில் எல்லாம் நிறைந்திருக்கிறது.
வரண ஆவஹர்ஷண பைரவர்...
நேயத்த நின்று நிமலனின் மறு அவதாரமாக இருக்கக் கூடியது தான் வரண ஆவஹர்ஷண பைரவர். உலககெங்கும் அருளாசி வழங்கி வரும் ஆலயங்களில் மூலவராக ஈஸ்வரன் வீற்றிருக்கும் கோயில்களில் கால பைரவரின் சன்னதியை தேடி தான் கண்டுபிடிக்க வேண்டியிருக்கும் .அந்தளவுக்கு சிறிய அளவில் தெற்கு நோக்கி அமைந்திருப்பார் கால பைரவர். ஆனால், தெய்வீக பூமியாக மாறிவிட்ட அவல்பூந்துறை இராட்டை சுற்றி பாளையத்தில் மேற்கு திசை நோக்கி 39 அடி உயரத்தில் வரண ஆவஹர்ஷண பைரவரை எழுந்தருளச் செய்திருப்பது தெய்வச் செயலாக கொண்டாடப்பட்டு வருகிறது.
உலகின் அதிசயமாக 39 அடி உயர வரண ஆவஹர்ஷண பைரவர் தெய்வீக காட்சியளிப்பது, உலக சாதனையாக unique book of world record எனும் உலக சாதனை புத்தகத்தில் வரலாறாக பதிவாகியிருக்கிறது.
தெய்வீகத்தில் உலக சாதனையாளராக மாறிவிட்ட ஸ்ரீ விஜய் சுவாமிஜியை அங்கீகரிக்கும் வகையில், சாதனை விருது வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்திரனர்களாக தமிழ்நாடு அரசின் வீட்டு வசதித்துறை அமைச்சர் சு. முத்துசாமி, ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி, பஞ்சாப் யுனிக் சாதனை புத்தகம் சார்பில் தென்னக பொறுப்பாளர் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டு சுவாமிக்கு விருதை வழங்கி பாராட்டு மழை பொழிந்தனர்.
திராவிட சிந்தனையார் அமைச்சர் சு.முத்துசாமியின் உரை, பக்தர்களின் உள்ளங்களை உருக்கியது.
அமைச்சர் பேசியதாவது: ஈரோடு மாவட்டத்தில் கால பைரவர் சிலை எழுந்தருளச் செய்யப்பட்டிருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதுவும் உலகிலேயே மிகப்பெரிய சிலையாக அமைந்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க செயல். குடமுழுக்கு விழா நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்கள் மட்டுமே உள்ளன. இருப்பினும் தற்போதே பக்தர்களும், பொதுமக்களும் கோயிலுக்கு திரண்டு வந்துக் கொண்டிருக்கிறார்கள். கால பைரவர் குடமுழுக்கு விழா நிறைவடைந்தவுடன் அதிகளவில் பக்தர்கள் இங்கு வருவார்கள். அவல்பூந்துறை வெகு விரைவாக மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறி கால பைரவர் கோயில் இந்தியா முழுவதும் பிரபலமாகப் போகிறது என்பதில் சிறிதளவும் சந்தேகம் இல்லை.
பக்தர்களின் கண்களும் உள்ளமும் குளிரும்…..
உலகில் எங்குமே காண முடியாத 39 அடி உயர கால பைரவர் கோயில் நீண்ட புகழோடு திகழ பக்தர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இங்கு கூடியிருக்கிற அனைவரின் ஒத்துழைப்பும் பைரவ பீடத்திற்கு எப்போதும் உண்டு.
இவ்வாறு அமைச்சர் சு.முத்துசாமி பாராட்டு மழை பொழிந்தார். இந்த நிகழ்வில் ஈரோடு மாநகராட்சி யேமர் நாகரத்தினம் சுப்பிரமணி, மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி, முன்னாள் எம்எல்ஏ ஆர்.எம்.பழனிசாமி, மொடக்குறிச்சி மேற்கு ஒன்றிய திமுக செயலாளரும், அவல்பூந்துறை முன்னாள் பேருராட்சி தலைவர் குணசேகரன் மற்றும் ஆன்றோர்கள் ஏராளமானோர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நாள்தோறும் ஸ்ரீ பைரவ பீடத்தில் தெய்வீக ஒலி கேட்டுக் கொண்டே இருக்கிறது. அதற்கு மேலும் அருள் கூட்டும் வகையில், குடமுழுக்கு விழாவிற்கான ஏற்பாடுகளும் பக்தியோடு நடைபெற்று வருகிறது.
குடமுழுக்கு விழா:
வரும் 2013-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி மாசி 29 திங்கட்கிழமை காலை 10:18 மணிக்கு ‘மகா கும்பாபிஷேகம் மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.
மகா கும்பாபிஷேக நிகழ்ச்சி நிரல்
நான்கு கால பூஜை
10.03.2023 மாசி மாதம் 26-ம் நாள் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு ஸ்வர்ண ஆஹர்ஷண பைரவ பஞ்சலோக சிலைக்கு பொது மக்களால் நெய் அபிஷேகம்
11.03.2023 மாசி மாதம் 2-ம் நாள் சனிக்கிழமை காலை 10 மணிக்கு கணபதி ஹோமத்திற்கு பிறகு முதற்கால பூஜை ஆரம்பம்.
11.03.2023 மாசி மாதம் 27-ம் நாள் சனிக்கிழமை மதியம் 2:30 மணிக்கு தீர்த்த ஊர்வலம் அவல்பூந்துறை ஈஸ்வரன் கோவிலில் இருந்து பைரவர் ஆலயத்திற்கு பொது மக்களால் தீர்த்தம் எடுத்து வருதல், தீர்த்த ஊர்வலம் யானை, குதிரை, கிராமிய நிகழ்ச்சி மற்றும் வானவேடிக்கையுடன் சிறப்பாக நடைபெறும்.
பாரம்பரிய கும்மி திருவிழா…
12.03-2023 மாசி மாதம் 28- ம் நாள் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இரண்டாம் கால பூஜை, மாலை 5 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு 7 மணிக்கு மேல் பாரம்பரிய கும்மி திருவிழா.
13.03.2023 மாசி மாதம் 29-ம் நாள் திங்கட்கிழமை காலை மணிக்கு நான்காம் கால பூஜை.
10:15 மணிக்கு மஹா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை
4 நாட்கள் அன்னதானம்…
10.03.2023 வெள்ளி முதல் 13.03.2023 திங்கள் வரை அன்னதானம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடமுழுக்கு விழாவின் பயன்கள்:
வாழ்நாளில் ஒரே ஒரு குடமுழுக்கு விழாவில் கலந்துகொண்டு தரிசனம் செய்தாலே, மூன்று ஜென்மங்களின் பாவங்கள் தீரும் என்பது ஆன்மிகவாதிகளின் அருள்வாக்கு. இதற்கு முன்பும் இதற்கு பின்பும் எங்கும் இல்லாத வகையில் அவல்பூந்துறையில் நடைபெறவுள்ள கால பைரவர் ஆலயத்தில் நடைபெறவுள்ள பிரம்மாண்டமான குடமுழுக்கு விழாவில் பக்தர்களாக கலந்து கொள்வது வாழ்நாள் புண்ணியமாக மாறிவிடும். மேலும், குடமுழுக்கு விழாவில் ஆவாஹாணம் செய்யும் ஆடை, அணிகலன்கள், பொன், பொருள் ஆகியவற்றை வழங்கினால், இப்பிறவிக்கான முழு பலனும் கிடைக்கும் என்கிறார்கள் ஆன்மிக பெரியவர்கள்.
குடமுழுக்கு விழா நடைபெறவுள்ள மார்ச் மாதத்திற்கு முன்பாகவே அவல்பூந்துறை 39 அடி வரண ஆவஹர்ஷண பைரவரை தரிசிக்க வேண்டும் என்று ஆவல் பிறக்கிறதா…
யாத்திரை மேற்கொள்ளுங்கள் பக்தர்களே.. உங்களை அன்போடு வரவேற்று ஆசி வழங்கி தெய்வீகத்தின் மகிமையை உள்ளங்களில் குடியேற்ற தயாராக இருக்கிறார் ஸ்வர்ண பைரவ பீட ஸ்ரீ விஜய் சுவாமிஜி…