சூடுபிடிக்கும் அரசியல் களம்..
ஊழல் புகார் குறித்து நேருக்கு நேர் விவாதம் நடத்த தயாரா என நேற்று ஈரோட்டில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, முதல்வர் இ.பி.எஸ்., மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்திருந்தார். அவரின் சவாலை ஏற்றுக்கொண்டுள்ள தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், முதலமைச்சருடன் விவாதம் நடத்த2 நிபந்தனைகளை விதித்துள்ளார்.
சம்பந்திக்கு டெண்டர் கொடுத்த ஊழல் வழக்கை விசாரிக்க உச்சநீதிமன்றம் விதித்த தடையை நீக்க எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க ஆளுநர் அனுமதிக் வேண்டும் என்ற அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த இரண்டு நிபந்தனைகளையும் நிறைவேற்றினால் முதலமைச்சருடன் நேருக்கு நேர் விவாதம் நடத்த தயார் எனவும் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.