Sat. Nov 23rd, 2024

டிரம்ப்பின் நடவடிக்கைகளால் அதிருப்தி..

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் அமோக வெற்றிப் பெற்ற பிறகும் அவரது வெற்றியை ஏற்றுக் கொள்ளாமல் தற்போதைய அதிபர் டிரம்ப், சிறுபிள்ளைய்போல தொடர்ந்து அடம் பிடித்து வருகிறார். ஜோவுக்கு எதிராக தொடர்ந்து உள்ளடி வேலைகளை டிரம்ப் செய்து வந்தாலும், ஜோ பிடனுக்கு ஆதரவாக அந்நாட்டு நாடாளுமன்றம் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளும் நாடாளுமன்றத்தில் தொடங்கிவிட்டது. இந்நிலையில், ஜோ பிடன் தேர்தல் வெற்றியை தடுக்க டிரம்ப் விடுத்த கோரிக்கையை துணை அதிபர் மைக் பென்ஸ் ஏற்க மறுப்பு தெரிவித்துவிட்டார்.
அரசியல்சாசனத்தின்படிதான் செயல்படுவேன் என்று மைக் பென்ஸ் அறிவித்ததால் அதிர்ச்சியடைந்த டிரம்ப், தனது ஆதரவாளர்களை தூண்டிவிடும் வகையில் பல்வேறு கருத்துகளை டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக ஊடகங்களில் வெளியிட்டு வந்தனர். இதனால், ஆவேசமடைந்த அவரது ஆதரவாளர்கள், அமெரிக்க கேபிட்டல் கட்டிடத்திற்குள் அத்துமீறி நுழைந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதளைத்தொடர்ந்து துணை அதிபர் மைக் பென்ஸ் மற்றும் பல செனட்டர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி கேபிட்டல் கட்டட வளாகத்திற்குள் நுழைந்த போது காவல் துறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பெண் ஒருவர் பலியானார்.
6 மணி நேரமாக நீடித்த அமெரிக்க நாடாளுமன்ற போராட்டம் முடிவுக்கு வந்தது.
இருப்பினும், மீண்டும் வன்முறைச் சம்பங்கள் நடைபெறாமல் தடுக்க, வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், அமெரிக்க நிகழ்வுகள் குறித்து முதல்முறையாக பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார். சட்டவிரோத ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனநாயக வழிமுறையை தகர்க்க அனுமதிக்க முடியாது என்றும்
அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களின் அத்துமீறல் குறித்தும் தனது அதிருப்தியை அவர் தெரிவித்துள்ளார். மேலும்,
வாஷிங்டனில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் தமக்கு மன உளைச்சல் அளிக்கிறது என்றும் பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.