Tue. Dec 3rd, 2024

இராணிப்பேட்டையில் இன்று காலை நடைபெற்ற அரசு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.118.40 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து 71,103 பயனாளிகளுக்கு ரூ.287.10 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்கினார்.

மேலும் 32.18 கோடி ரூபாயில் மேற்கொள்ளப்பட்ட 23 வளர்ச்சிப் பணிகளையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், 22.19 கோடி ரூபாயில் புதிதாக மேற்கொள்ளப்படவுள்ள 5 வளர்ச்சிப் பணிகளுக்கு அடிக்கல் நாடினார்.

https://twitter.com/mkstalin/status/1542445424849498112?s=20&t=6vtb3mVeU3yGWqh4EyPVgw

விளம்பரம் தேவையில்லை…

தொடர்ந்து விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக் கூடிய எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை என்று எதிர்க்கட்சியினருக்கு பதிலடி கொடுத்தார்.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் பேசியதாவது:

பெற்றவர்களை போல இந்த திமுக அரசும் செயல்படவேண்டும் என்று நினைக்கிறேன்.

மக்களுக்கு என்னவெல்லாம் தேவையோ அதையெல்லாம் பார்த்து பார்த்து செய்வேன்-.

வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று எதிர்க்கட்சியினர், சில உதிரி கட்சியினர், நான்தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக்கொண்டு அநாதையாக அலைந்துக்கொண்டிருப்பவர்கள் பேசுகின்றனர்.

ஆனால், நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகளை நான் சட்டமன்றத்திலேயே பட்டியல் போட்டிருக்கிறேன்

நான் விளம்பர பிரியராக இருப்பதாக சிலர் சொல்கிறார்கள். எனக்கெதற்கு விளம்பரம் ? இனிமேலும் எனக்கு விளம்பரம் தேவையா ?

55 ஆண்டுகாலம் அரசியலில் இருக்கக் கூடிய எனக்கு எந்த விளம்பரமும் தேவையில்லை.

திமுக அரசின் திட்டங்கள் எதுவும் விளம்பரத்திற்காக செய்வதல்ல ; அது மக்களுக்காக செய்வது.

விளம்பரம் எனக்கு தேவையில்லை. ஏற்கனவே, எனக்கு கிடைத்திருக்கும் புகழையும் பெருமையையும் காப்பாற்றினால் போதும் என்று நினைப்பவன் நான்.

திராவிடமாடல் என்றால் காலமெல்லாம் எனது முகம்தான் மக்களின் மனதில் நினைவுக்கு வரும்.

திராவிட மாடல்’ என்றால் என் முகமும், ‘ஒன்றியம்’ என்று சொன்னால் என குரலும் மக்கள் மனதில் நினைவுக்கு வரும் ; அது போதும் எனக்கு.

நான், என் முகம், என் குரல், என் பெயர் என்று சொன்னால், தனிப்பட்ட மு.க.ஸ்டாலின் என்று நினைக்க வேண்டாம்.

நீங்கள் அனைவரும் சேர்ந்த கூட்டுக் கலவைதான் இந்த ‘நான்

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்..