Sat. Apr 19th, 2025

வானிலை ஆய்வு மையம் தகவல்..

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் ஆகிய 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

குமரிக்கடல் முதல் வடதமிழக பகுதிகள் வரை வளிமண்டல சுழற்சி நிலவுவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாகவும், கிழக்கு திசை காற்று காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது