Sat. Apr 19th, 2025

அதிமுக முன்னாள் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி இன்று தனது 68 வது பிறந்தநாளை சேலத்தில் கொண்டாடினார். அவரது இல்லத்தில் திரண்ட அதிமுக முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.

அதிமுக முன்னாள் அமைச்சர் கடலூர் எம்.சி.சம்பத், எம்.ஆர். விஜயபாஸ்கர், ஈரோடு கருப்பண்ணன், ராஜலெட்சுமி உள்ளிட்ட பலர் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

இதேபோல, சேலம் மாவட்ட அதிமுக நிர்வாகள் உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த அதிமுக நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.

நூல் விலை ஏற்றத்தை குறைக்க வேண்டும்…

முன்னதாக இன்று காலை நூல் விலை உயர்வால் ஜவுளித் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், அதன் விலையை குறைக்க போர்க்கால அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியிருந்தார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: