Sun. May 12th, 2024

சட்டப்பேரவையில் இன்று ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மானியக் கோரிக்கையை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தாக்கல் செய்நு பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.. அதன் விவரம்:

தூய்மை பணியாளர்கள் வீடு வாங்க மானியம் வழங்கப்படும்.

200 நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் நிலம் வாங்க ரூ.10 கோடி செலவில் மானியம் வழங்கப்படும்.

90 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல கல்லூரி மாணவியர் விடுதிகளில் ₹50 லட்சம் செலவில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும்.

அழிவின் விளிம்பில் உள்ள தோடர், கோத்தர், குரும்பர், இருளர், பணியர் மற்றும் காட்டுநாயக்கன் ஆகிய 6 பண்டைய பழங்குடியினரின் இனவரவியல் மற்றும் கலாசாரங்கள் அழியா வண்ணம் பாதுகாக்க, ஒலி/ஒளி ஆவணமாக ₹50 லட்சம் மதிப்பீட்டில் பதிவு செய்யப்படும்.

கடந்த மானியக்கோரிக்கையில் அறிவிக்கப்பட்ட 23 அறிவிப்புகளில் 20 அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிடப் பட்டு செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 3 அறிவிப்புகளை நிறைவேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆதிதிராவிட பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பல்வேறு புதிய அறிவிப்புகளை அமைச்சர் கயல்விழி வெளியிட்டார்..

மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு இன்று காலை முதல்வர் மு. க. ஸ்டாலினை தலைமைச் செயலகத்தில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.. இந்த சந்திப்பின் போது துறையின் முதன்மைச் செயலாளர் டாக்டர் மணிவாசன் ஐஏஎஸ் மற்றும் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்..