கோயம்புத்தூர் புறநகர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த ரம்யா பாரதி ஐபிஎஸ், காவல்துறை துணை தலைவராக (டிஐஜி) பதவி உயர்வுப் பெற்று பெருநகர சென்னை காவல் துறை ஆணையரகத்தின் வடக்கு மண்டல சட்டம் ஒழுங்கு இணை ஆணையராக பணி நியமனம் செய்யப்பட்டார்.
பதவியேற்ற ஒரு வாரத்திற்குள்ளாகவே சட்டம் ஒழுங்குப் பணியில் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து, வடசென்னை மக்களிடம் நற்பெயரை பெற்றார் ரம்யா பாரதி ஐபிஎஸ். 2008 ம் ஆண்டில் ஐபிஎஸ் அதிகாரியாக பதவியேற்ற அவர், போதை ஒழிப்பு, இளம் தலைமுறையினர் தவறான பாதையில் சென்று விடாமல் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அதீத ஆர்வத்துடன் செயல்பட்டு வருகிறார்.
கோயம்புத்தூர் மாவட்ட புறநகர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றிய காலத்தில் ரம்யா பாரதி, இளம் குற்றவாளிகளை அடையாளம் கண்டு அவர்களை நல்வழிப்படுத்தும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களை குறி வைத்து போதை பழக்கத்திற்கு அடிமைப்படுத்தும் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவோரை கூண்டோடு ஒழிக்கும் வகையில் அதிரடி நடவடிக்கைகளை முழு வீச்சில் மேற்கொண்டார்.
இதன் காரணமாக, இளம் தலைமுறையினர் மற்றும் பெற்றோர், பொதுமக்களிடம் நன்மதிப்பை பெற்றவர் ரம்யா பாரதி ஐபிஎஸ்.
சென்னை பெருநகர காவல்துறை இணை ஆணையராக பதவியேற்றவுடன் வழக்கம் போல சட்டம் ஒழுங்குப் பிரிவில் அதிரடி காட்டிய ரம்யா பாரதி, நேற்று நள்ளிரவு மிதிவண்டியில் தனி பாதுகாப்பு அதிகாரி ஒருவர் மட்டுமே துணைக்கு வர வடசென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு துணிச்சலுடன் சென்று இரவு நேர வாகனப்போக்குவரத்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்த காவல் அலுவலர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, பல்வேறு காவல் நிலையங்களுக்கு திடீர் என்று சென்று ஆய்வு மேற்கொண்டார். விளையாட்டு வீராங்கனைப் போல தனி ஒருவராக வந்த இணை ஆணையர் ரம்யா பாரதி ஐபிஎஸ்ஸை பார்த்து இரவு நேர பணியில் இருந்த காவல் அலுவலர்கள் உள்ளிட்டோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இணை ஆணையர் ரம்யா பாரதியின் நள்ளிரவு ரோந்துப் பணி தொடர்பான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகி, சமூக ஆர்வலர்களிடம் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
இதனையறிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினும், துபாயில் இருந்தவாறே ரம்யா பாரதி ஐபிஎஸ்ஸின் பணிகளை பாராட்டி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: