Fri. Apr 18th, 2025

என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனைச்சாவடி யில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 8 ஆம் தேதி வாகனச் சோதனையில் ஈடுபட்ட போது காவல் சிறப்பு எஸ்.ஐ. வில்சனை பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய பயங்கரவாதி ஷிஹாபுதின் என்கிற சையது ஆல்வியை தேசிய புலனாய்வுப் அமைப்பினர் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையல், கத்தாரில் இருந்து விமானத்தில் செவ்வாய் இரவு சென்னை வந்த அவரைகுடியுரிமை அதிகாரிகள், தேசிய புலனாய்வு அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த என்.ஐ.ஏ. அதிகாரிகள் ஷிஹாபுதினை கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.