நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி துவங்கிய நேரம் முதலாகவே திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை வகித்து வந்தது. அதனையடுத்து, அண்ணா அறிவாலயத்தில் பெரும்திரளாக திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் உற்சாகத்தில் ஆட்டம் பாட்டம் என உற்சாகமாக திளைத்தனர்.
வரலாறு காணாத வெற்றியை திமுக எட்டியதையடுத்து, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை, திமுக பொதுச் செயலாளரும் நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன், திமுக எம்பிகள் ஆ.ராஜா, தயாநிதிமாறன், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ சந்திரசேகர் ஆகியோர் சந்தித்து வாழ்த்து தெரிவித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், திராவிட அரசியலுக்கு கிடைத்த வெற்றி என பெருமிதாக தெரிவித்தார். முதல்வரின் முழு பேட்டி விவரம்:
மாலையில் உள்ளாட்சித் தேர்தலில் கிடைத்த வெற்றியை பேரறிஞர் அண்ணா, கலைஞர் மு.கருணாநிதி ஆகியோருக்கு சமர்ப்பிக்கும் விதமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞர் மு.கருணாநிதி ஆகியோரின் நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினர். அவருடன் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ மற்றும் திமுக முன்னணி நிர்வாகிகள் உடன் சென்றிருந்தனர்.