டெல்லியில் தேசிய கொடி ஏற்றி வைத்தார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்.
73வது குடியரசு தினவிழாவையொட்டி டெல்லியில் தேசியக் கொடியை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றிவைத்தார். ராஜ பாதையில் நடைபெற்ற முப்படைகளின் கண்கவர் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ஏற்றுக்கொண்டார்..
தேச பக்தி மற்றும் சுதந்திர போராட்டத்தின் தீரத்தை வெளிப்படுத்தும் அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு பொதுமக்களை உணர்ச்சி கொந்தளிப்பில் ஆழ்த்தியது..
இந்த விழாவில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், முப்படைகளின் தளபதிகள், உச்ச நீதிமன்ற நீதியரசர்கள், மத்திய, மாநில அரசின் உயர் அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் உள்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்..
இந்திய ராணுவத்தின் சக்தி வாய்ந்த போர் விமானங்கள், ஹெலிகாப்டர்கள் வானில் நிகழ்த்திய சாகசங்கள் பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தது..
நாட்டின் 73வது குடியரசு தினம்: சென்னை கடற்கரை சாலையில் சிறப்பாக கொண்டாடப்பட்டது..மகாத்மா காந்தி சிலை முன்பு முவர்ண கொடியை ஏற்றிவைத்து ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை செலுத்தினார்..
ஆளுநராக பொறுப்பேற்ற பிறகு முதன்முறையாக தேசியக் கொடியேற்றினார் ஆர்.என்.ரவி.
குடியரசு தினவிழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள், தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு ஐஏஎஸ், நீதியரசர்கள், அரசு உயர் அதிகாரிகள், காவல்துறை உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.. தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்ட போது ஹெலிகாப்டர் மூலம் மலர் தூவப்பட்டது.
குடியரசு தின விழாவில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள்.
அலங்கார ஊர்தியின் முகப்பில் “மீண்டும் மஞ்சப்பை“ திட்டம்.
தமிழக செய்தித்தொடர்பு துறையின் அலங்கார ஊர்தியின் முகப்பில் இடம்பெற்றுள்ளது.
தமிழகத்தின் சுதந்திர போராட்ட வீரர்களை சிறப்பிக்கும் வகையில் ஊர்தி வடிவமைப்பு.
பாரதியார், வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரி ஆகியோரின் சிலைகள் இடம்பிடிப்பு.
சுதந்திர போராட்டம், சீர்த்திருத்தங்களில் முக்கிய பங்காற்றியவர்களை போற்றும் ஊர்தி.