Fri. Mar 29th, 2024

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம்பெண்களை, கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோ எடுத்த நிகழ்வு தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.  இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின்பேரில் பொள்ளாச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கு சி.பி.ஐ. வசம் ஒப்படைக்கப்பட்டது.

தொடர் விசாரணையில் ஈடுபட்டு வந்த சி.பி.ஐ, இரண்டாண்டுகளுக்கு முன்பு குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்தது. இந்நிலையில், பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம், மைக் பாபு ,கெரோன்பவுல் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்திய சிபிஐ, மூன்று பேரையும் கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியது. வரும் ஜனவரி 20 ஆம் தேதி வரை மூன்று பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

தி.மு.க கருத்து :பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுக பிரமுகர்களுக்கு தொடர்புள்ளது என்ற திமுகவின் கூற்று உண்மையாகியுள்ளது.
அதிமுக அரசிடம் வழக்கு விசாரணை தொடர்ந்திருந்தால் இந்த கைதுகள் நடந்திருக்குமா? – கனிமொழி, எம்.பி

அ.தி.மு.க. நடவடிக்கை :பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அருளானந்தம் கைது செய்யப்பட்ட நிலையில் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் பதவியில் இருந்து அவர் நீக்கப்பட்டு உள்ளார். அனைத்து பொறுப்புகளில் இருந்தும் அவரை நீக்கம் செய்து அ.தி.மு.க. தலைமை நடவடிக்கை எடுத்துள்ளது.