Fri. Apr 26th, 2024

வலுவிலக்கிறதா திரிணாமுல் காங்கிரஸ்…

மேற்கு வங்காள மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சரான லட்சுமி ரத்தன் சுக்லா செவ்வாய் கிழமை தனது பதவியிலிருந்து விலகினார். அமைச்சர் பதவியை கைகழுவும் 2 வது அமைச்சர் இவர்.

இதேபோல், இளைஞர் நலத்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் லக்‌ஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்து உள்ளார். ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு அமைச்சர்கள் பதவி விலகியதையடுத்து,மம்தா பேனர்ஜி அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது

அண்மையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவரான சுவேந்து அதிகாரி, தான் வகித்து வந்த போக்குவரத்துத்துறை அமைச்சர் பதவியிலிருந்து விலகி, ஆதரவாளர்களுடன் பா.ஜனதாவில் இணைந்தார். தனது செல்வாக்கை காட்டும்வகையில் கொல்கத்தாவில் பிரம்மாண்ட பேரணியை நடத்தி, அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு அதிர்ச்சி கொடுத்தார் என்பது நினைவுக்கூரத்தக்கது.