சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழகத்தில் அனைவருக்கும் தடுப்பூசி என்ற திட்டத்தை முனைப்புடன் முன்னெடுத்து வருவதாக கூறினார்.
தொடர்ந்து அவர் கூறியதாவது :
தமிழகத்தல் தடுப்பூசி செலுத்தும் பணியில் சென்னை மாநகராட்சி முதலிடத்தில் உள்ளது.
தமிழ்நாடில் இதுவரை 3.53 கோடி பேருக்கு கொரேனோ தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மட்டும் 42 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
வரும் ஞாயிற்றுக்கிழமை தமிழ்நாடு முழுவதும் ஒரே நாளில் 20 லட்சம் கொரோனோ தடுப்பூசிகள் போடும் வகையில் முனைப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையில் மட்டும் 112 சிறப்பு முகாம்களில் மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்படவுள்ளது.
இன்றைய தேதியில் தமிழகத்தில் 30 லட்சத்து 40 ஆயிரத்து 710 தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
இவ்வாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.